நீர்கொழும்பு- துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று(7.2.2026) மாலை முன்னெடுத்த தேடுதலின்போதே இந்தக் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள கடற்கரை அணுகல் வீதியின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் துன்கல்பிடிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.