நீர்கொழும்பு – லெல்லம பகுதியில் அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று திங்கட்கிழமை (24) காலை குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சுமார் 55 வயது மதிக்கத்தக்க, கபிலநில ஆடை அணிந்துள்ளார் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.