நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வழக்கு ஒன்றுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க 2024.08.19 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டி தலதா பெரஹராவை நிறுத்துவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

இந்த போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக 2024.09.11 ஆம் திகதியன்று திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக பிரதமர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தான் குறிப்பிட்ட விடயத்தால் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றிருக்கமாட்டார் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்;டார்.கண்டி தலதா மாளிகை பற்றி குறிப்பிட்ட கருத்துக்கும், தேர்தலில் பிரதமர் வெற்றிப்பெற்றதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

இந்த வழக்கில் நட்டஈடு செலுத்துவதற்கு திஸ்ஸ அத்தநாயக்க 100 மில்லியன் ரூபாவை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குறிப்பிட்ட பொய்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலளிக்க வேண்டியுள்ளது.

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். எதிர்க்கட்சியினரின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு