டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) அவர்களை இன்று (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்.
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நட்புறவை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் முகமாக இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கை எதிர்கொண்ட சகல இக்கட்டான தருணங்களிலும் பங்களாதேஷ் நமது நாட்டோடு நெருக்கமாக செயற்பட்டமைக்கு ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த இக்கட்டான நேரத்தில், ஒரு நாடாக நாம் மீண்டும் எழுவதற்குத் தேவையான பக்க பலத்தைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஆண்டலிப் எலியாஸவிடம் கேட்டுக் கொண்டார்.
By C.G.Prashanthan