நிலுவையிலுள்ள வரிகளை அறவிட நடவடிக்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிகளை அறவிட நடவடிக்கை
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரி நிலுவைகளை அறவிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரிகளை அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விடயம் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சில நிறுவனங்களின் வரி நிலுவைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் வரி நிலுவை 1.29 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 1.6 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனங்களுக்கு உண்மையாகவே வரி செலுத்தும் எண்ணம் இருந்திருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, பிரதிவாதியான டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக் சரூக், தனது கட்சிக்காரர்களின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அனைத்து வங்கிக் கணக்குகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவை வரிகளை அறவிடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான சத்தியக்கடதாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சில நிறுவனங்களின் உற்பத்தி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த தலைமை நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம், மனுவை மீண்டும் மார்ச் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இவ்விடயத்தின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறு தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தது.

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்