அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு புதிய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், சந்திரனில் உலகின் முதல் நிரந்தர ஹோட்டலை அமைக்கும் பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக நாடுகள் நிலவை ஆராய்வதில் தற்போது மிகுந்த கவனம் செலுத்துகின்றன. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே நிலவில் விண்கலங்களை வெற்றிகரமாக தரையிறக்கி முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக இந்தியா, நிலவின் தென் துருவத்தைத் தொடும் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்போது நிலவில் நீர் இருப்பு, தாதுப் பொருட்கள், எதிர்கால மனித வனிக்ஸ் வாய்ப்புகள் போன்றவற்றை புரிந்து கொள்ள பல நாடுகள் தொடர்ந்து நிலவினை ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த புதிய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், நிலவில் உலகின் முதல் நிரந்தர ஹோட்டலை அமைக்கும் பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. 2029ஆம் ஆண்டில் கட்டுமானம் ஆரம்பமாகி, 2032ஆம் ஆண்டில் முதல் விருந்தினர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருகாலத்தில் கற்பனையாக கருதப்பட்ட நிலவில் ஹோட்டல் அமைக்கும் யோசனை, தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நிஜமாகும் நிலையில் உள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப், முழுமையான வசதிகளுடன் நிலவில் ஒரு ஆடம்பர ஹோட்டலை உருவாக்க திட்டமிட்டுள்ளது.