எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள் என நாவற்காடு கிராமத்தில் கிராம சேவையாளரால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு இன்றையதினம் (14) கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் முள்ளியவளை வடக்கு நாவற்காட்டு கிராமசேவகர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 385 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உண்மையாகவே வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரடியாக பார்வையிடவில்லை எனவும், வெள்ள அனர்த்த நிவாரணம் வழங்குவதிலும் முறைகேடுகள் இடம்பெறுகிறது எனவும் முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதி கிராம சேவகர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.