சென்னை:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருவது குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கு, அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக ‘நான் முதல்வன்’ திட்டம், ‘திறன் மேம்பாட்டுத் திட்டம்’ என மாற்றப்பட்டதற்கு, மக்கள் மத்தியிலிருந்த குழப்பமே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் செய்யவில்லை; திட்டத்தின் நோக்கம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம்” என்று கூறியுள்ளார்.
“நான் முதல்வன் என்றால் அது முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கிற திட்டமோ என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். திறனை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு, அதைத் தெளிவாகச் சொல்வதற்காகத்தான் பெயர் மாற்றம் செய்துள்ளோம். இதில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை, திட்டம் அதே வேகத்தில் தொடரும்” என்று அவர் தெளிவுபடுத்தினார். முந்தைய ஆட்சியின் திட்டங்களைத் தவெக அரசு முடக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், அமைச்சரின் இந்த விளக்கம் அரசியல் ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
#MinisterNirmalKumar #TVK #Vijay #ThalapathyVijay #NaanMudhalvan #SkillDevelopment #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #PoliticalDrama #TamilNaduPolitics #SchemeRenaming #TamilNaduNews #PoliticalAttack #Governance #TamilPolitics #Debate #TNPolitics #PublicPolicy #EducationReform