நான்கு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன – நுவரெலியா மாவட்ட செயலாளர்

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் , மண்சரிவு உட்பட ஏனைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நுவரெலியாவிற்கு உள் நுளையும் நான்கு பிரதான வீதிகள் தடைபட்டிருந்தன.

நுவரெலியா-கண்டி வீதி உட்பட நுவரெலியாவுக்குச் உள் நுளையும் நான்கு வீதிகளில் தடைகள் நீக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை (10) பிற்பகல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்டச் செயலாளர் மேலும் கூறுகையில் பிரதான வீதிகளை சீர்திருத்தம் செய்த போதிலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த வீதிகளை வழக்கம் போல் போக்குவரத்துக்கு பரிந்துரை அறிக்கையை வழங்க வில்லை .

வீதியின் தன்மையினை ஆராய்ந்து போக்குவரத்தில் ஈடுபட முடியும் என பரிந்துரை வழங்கிய பிறகு கனரக வாகனங்கள் தாராளமாக சென்று வருவதற்கு வீதி திறக்கப்படும்.

எனினும் இலகுகரக வாகனங்கள் தாராளமாக சென்று வருவதற்கு வீதி திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 19,832 குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 63,000 உறுப்பினர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் 6,700 குடும்பங்கள் 212 பேர் தற்காலிக தங்குமிட முகாம்களில் உள்ளனர், எனவே அவர்களுக்கு சமைத்த உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது .

மேலும் தற்போதைய வானிலை நிலை சீரான பின்னர் இடம்பெயர்ந்தவர்களில் சிலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 67 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் வீடுகளை சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபாய் பணம் அடுத்த சில நாட்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

By C.G.Prashanthan

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்