நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது.

‘தித்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு உலகநாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணையவேண்டும் என வலியுறுத்தி அனைத்துலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவதியடைந்து வருகின்றன. மக்களின் வீடுகள், அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் வாழ்வாதாரம் என அனைத்தும் சீர்குலைந்திருக்கும் நிலையில், உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இவ்வேளையில் இன்றியமையாதவையாகியுள்ளன.

எனவே உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப உதவுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அதேவேளை இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை முறையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கென 7 பேர் கொண்டு சிறப்புக்குழுவொன்றை நிறுவியுள்ளோம்.

களத்தில் உள்ள அவசர தேவைகளை மதிப்பாய்வு செய்தல், களத்தில் நம்பகமான கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படல், நிதி மற்றும் வளங்களை ஒருங்கிணைத்தல், உதவிப்பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதைக் கண்காணித்தல், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமகாலத் தகவல்களை வழங்கல் உள்ளிட்ட பணிகள் இக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்படும்.

இது சாதாரண உதவி கேட்கும் தருணம் அல்ல. மாறாக இது தமிழர்களின் ஒற்றுமை வெளிப்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணமாகும். நம் தாயகம் நம்மை நாடுகிறது. இவ்வேளையில் நாமனைவரும் ஒன்றிணைந்து உதவினால் மட்டுமே நாட்டின் மீட்சி துரிதமடையும். ஆகவே அனைவரும் இணைந்து கைகோர்த்து, இந்த மனிதாபிமான முயற்சியில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த