நாட்டுக்குப் பெருந்தொகை நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இக்கடினமான நேரத்தில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவி, பல ஆயிரக்கணக்கான பேரிடர் பாதித்த குடும்பங்களுக்கு மிகத் தேவையான நிவாரணமாக அமையும். இது முதலாவது உதவி அல்ல என்பதை இலங்கை மக்கள் சார்பாக நான் குறிப்பிடுகின்றேன்.

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா, 100 மெட்ரிக் தொன் மருந்துகள் ஆகிய பெரும் அளவிலான நிவாரண உதவிகளை தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பி வழங்கி வைத்தது.

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் தமிழக அரசின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், தமிழக முதல்வரின் பார்வை மற்றும் மனிதாபிமானப் பணி நிறைவேற தமிழ்நாடு அரசு முழுமையாக ஒத்துழைக்கத் தயார் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிவாரண உதவியை சாத்தியமாக்குவதில் பல அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் ஒருங்கிணைப்பும் முக்கிய பங்கு வகித்தது

குறிப்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திரு. முருகானந்தம், IAS, தமிழக பொதுச் செயலாளர் திருமதி ரீதா ஹரிஷ், IAS, தமிழக அரசின் வெளிநாட்டு தமிழர் நல ஆணையகத்தின் ஆணையாளர் திரு. வள்ளலார், IAS மற்றும் குழு உறுப்பினர்களான அப்துல்லா மற்றும் திரு. புகழ் காந்தி – NRT ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்தது.

இதேவேளை, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கும் இலங்கை சார்பாக சிறப்பு நன்றியை தெரிவிக்கின்றேன்.

இந்த நேரத்தில் விரைவான நடவடிக்கைகளை எடுத்த இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகர் வைத்தியர் கணேசநாதன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்

By C.G.Prashanthan

au

“பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் உதவி

December 7, 2025

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு தற்போது “பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் “செயல்படுத்தப்பட்ட துணை ஊட்டச்சத்து உணவாக”

bst

சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த கால்நடை விபரம்!

December 7, 2025

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ​ சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள்

cir

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

December 7, 2025

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு

photo-collage.png (5)

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு; அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன

December 7, 2025

அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இஇலங்கையை வந்தடைந்தன. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில்

crim

67 வயதான கணவரை உலக்கையால் தாக்கி; கொன்ற மனைவி

December 7, 2025

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்

ja hind

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம்

December 7, 2025

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம் யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட

1751730278-rice-hjg-L

அரிசியை வாங்கும் போது அவதானமாக இருங்கள்

December 7, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை

sama

மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது – சாமர சம்பத்

December 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

tu

சுற்றுலாப் பயணிகளின் மனிதாபிமான உதவிகள்…

December 7, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான

Education

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்…

December 7, 2025

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில்

juvan

இலங்கை மக்கள் குறித்து கனேடிய தமிழ் எம்பி முன்வைத்த கோரிக்கை!

December 7, 2025

இலங்கைக்கு வலுவான ஆதரவை கனடா வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் அழைப்பு விடுத்தார்.

ditva_4

சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவை புயல் ஏற்படுத்திவிட்டது?

December 7, 2025

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என