நாட்டில் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் இதுவரை ஏற்படவில்லை

நாட்டில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி தப்பிக்க முற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அமைச்சர்களும், ஆளுந்தரப்பு எம்.பி.க்களும் தேர்தலுக்கு முன்னர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அதனைக் கூறியே ஆட்சியையும் கைப்பற்றினர். எதிர்க்கட்சியினருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கற்பிப்பதாகவும் கூறினர். ஆனால் இவர்கள் ஆட்சியமைத்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு எந்த நிலையிலிருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

அன்றாடம் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூடுகளால் மக்களின் உயிருக்கு எந்தளவு அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளது என்பதை நாம் அறிவோம். கடந்த ஒரு வருடத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளதோடு, 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக பிரதேசசபைத் தலைவர் ஒருவர் தனது அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதற்கு முன்னர் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி விடுகின்றனர்.

உண்மையிலேயே அந்த சம்பவங்கள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவையாகக் காணப்பட்டாலும், அதற்கான பொறுப்பு கூறலிலிருந்து அரசாங்கத்தால் விலக முடியாது. எனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதை விடுத்து, இனிவரும் காலங்களை இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

குறிப்பாக இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு பொலிஸ்மா அதிபரும் இந்தளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டவராக இருக்கவில்லை.

அரச அதிகாரியான அவருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக உறுதியாகியுள்ளது. அதற்கு காரணம் பாதாள உலகக் குழுவினருடனான தொடர்பு என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கூறுவதைப் போலவே பொலிஸ்மா அதிபரும் எதிர்க்கட்சியினருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் ஜே.வி.பி.யின் பெலவத்த அலுவலகத்துக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட மேலும் பல மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பக்கசார்பான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த