ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார்.
மன்னாருக்குச் சென்ற பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும் சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது நீதிமன்ற செயற்பாடுகள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.