நாடளாவிய ரீதியில் 2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலை நடவடிக்கைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2026 கல்வி ஆண்டிற்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பான விசேட அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைப் பின்வருமாறு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2025ஆம் ஆண்டில் தரம் 1 இற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான பாடத்திட்டத்தின் முறைசார் கற்கை நடவடிக்கைகள், ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

தரம் 6 இற்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய பாடத்திட்ட அமுலாக்கமானது 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுகின்றது. 2026ஆம் ஆண்டில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான வகுப்புகளுக்கு, நாளாந்தப் பாடவேளைகளின் எண்ணிக்கை எட்டாக (08) மட்டுப்படுத்தப்படல் வேண்டும் என்பதுடன் ஒரு பாடவேளைக்கான கால அளவு 40 நிமிடங்களாக நிர்ணயிக்கப்படல் வேண்டும். இதற்கமைய கடந்த வருடங்களில் பின்பற்றப்பட்ட முறைமைக்கு அமைவாகவே கால அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

தரம் 6 இற்காக கடந்த வருடங்களில் நடைமுறையில் இருந்த பாடத்திட்டமே 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். தரம் 6 கல்வி நடவடிக்கைகளுக்கு, கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் பயன்படுத்திய பாடநூல்களையே பிரதானமாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கடந்த வருடம் பயன்படுத்தப்பட்ட பாடநூல்களை மாணவர்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை மீண்டும் தரம் 6 மாணவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்படும். அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புதிய பாடநூல்களை விரைவாக அச்சிட்டு விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய பாடநூல்களுக்குரிய மென் பிரதிகள், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். புதிய சீர்திருத்தங்களுக்குரிய மொடியூல் தொடர்பான முன்னோடித் திட்டமொன்றை, இவ்வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட சில மாகாணங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தரம் 6 இற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள மொடியூல் மீண்டும் மீளாய்வு செய்து எதிர்வரும் ஆண்டில் பொருத்தமான வகையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான ஆசிரியர் குழாமைத் தயார்ப்படுத்தும் பயிற்சி நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டு முழுவதும் தொடரச்சியாக முன்னெடுக்கப்படும்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, நிர்வாகச் சீர்திருத்தங்கள், மதிப்பீட்டுச் செயல்முறை மேம்பாடு மற்றும் பரந்தளவிலான பொது மக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆகியன 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள எண்ணக்கருப் பத்திரம், கலைத்திட்ட சட்டகம் மற்றும் அனைத்துத் தொகுதிகளும், திறந்த மற்றும் விரிவானதொரு பொதுக் கலந்துரையாடலுக்காக பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்