ணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார்.
தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.