சென்னை:
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 144 வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டசபையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
இன்று காலை சபையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. தீர்மானத்திற்கு ஆதரவாக தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் அதிமுக-வின் சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 144 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 22 பேர் வாக்களித்த நிலையில், திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
பெரும்பான்மைக்குத் தேவையான 116 என்ற எண்ணிக்கையைத் தாண்டி, 144 உறுப்பினர்களின் பலத்துடன் விஜய் அரசு தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, அவை நடவடிக்கைகள் நிறைவு பெற்றதாகக் கூறி, சட்டசபையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார். இந்த வெற்றியின் மூலம் தவெக அரசு தனது முழு அதிகாரத்துடன் மக்கள் பணிகளைத் தொடங்குவதற்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
#ConfidenceVoteVictory #VijayAsCM #TNAssenbly #TVK_Wins #BreakingNews #May13 #TamilNaduPolitics #144Votes #MajoritProven #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyAdjourned #SpeakerJCDPrabhakar #VictoryForVijay #FortStGeorge #DemocraticSuccess #ElectionResults2026 #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`