லைகா தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய். தெலுங்கில் பிரபல ஹீரோவாக வலம் வரும் சந்தீப் கிஷன் நடிப்பில் இப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ஷுட்டிங் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் படமொன்றை இயக்க வருகிறார். அப்பா வழியில் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாத்தாவை மாதிரி இயக்குனர் அவதாராம் எடுத்துள்ளார். சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சஞ்சய் வெளிநாட்டில் டைரக்ஷன் குறித்த கோர்ஸ் முடித்துள்ளார். இவரை ஹீரோவாக்க வேண்டுமென ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்தனர். ஆனால் டைரக்ஷனில் ஆர்வம் காட்டிய ஜேசன் சஞ்சய் படம் இயக்க வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தார்.