ரம்புக்கனை, யடகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 13 கிலோவிற்கும் அதிகமான, திருடப்பட்ட செப்புக் கம்பியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (9) ரம்புக்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரைணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.