தையிட்டி விகாரை தேவ நம்பிய தீசன் காலத்திற்குரியது – பௌத்த காங்கிரஸ் சோ. சுகிர்தனுக்கு கடிதம்!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலம் அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து தர வேண்டும் என கோரி இலங்கை பௌத்த காங்கிரஸ் , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக எமது பகுதி இருந்த வேளை எமது உறுதி காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி அதனுள் விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் , விகாரையை சுற்றியுள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் , அந்த காணிகளை எம்மிடம் மீள கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை விகாரை கட்டுவதற்கான அனுமதிகள் எவையும் பெறப்படாது , அவ்விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வரும் காலங்களில் எவ்விதமான புதிய கட்டட வேலைகளை அனுமதியின்றி முன்னெடுக்க கூடாது என பிரதேச சபையினால் விகாராதிபதிக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையிலையே இலங்கை பௌத்த காங்கிரஸ் , தவிசாளருக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில்,

தையிட்டி திஸ்ஸ விகாரை தேவநம்பிய தீசன் காலத்து பௌத்த நிலத்தில் நிறுவப்பட்ட புராதன விகாரை ஆகும். அது பிற்காலத்தில் அழிவடைந்த நிலையில் 1950ஆம் ஆண்டு கால பகுதியில் , மீளவும் புனரமைக்கப்பட்டு  , 1959ஆம் ஆண்டு வரையில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கான சான்று ஆதாரங்கள் உண்டு.

1958ஆம் ஆண்டு நிலஅளவை திணைக்களத்தின் வரை படத்தின் பிரகாரம் 20 ஏக்கர் காணி விகாரைக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. அப்பகுதியில் குளம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு கால பகுதியில் நகர அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த இடம் விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் உள்நாட்டு போர் காரணமாக விகாரையை சுற்றியுள்ள அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 6ஆயிரம் ஏக்கர் காணி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பகுதிகள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, 2018ஆம் ஆண்டு கால பகுதியில் விகாரை இருந்த இடம் அடையாளப்படுத்தப்பட்டு , விகாரை அமைக்கும் பணிகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையில் விகாரையின் விரிவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

2024ஆம் ஆண்டு விகாரைக்குரிய காணியை அடையாளப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் 14 ஏக்கர் 5.97 பேர்ச் காணியே காணப்பட்டது. 1959ஆம் ஆண்டு விகாரைக்கு இருந்த காணியை விட சுமார் 6 ஏக்கர் காணி குறைவாக காணப்பட்டது அதனால் எஞ்சிய காணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது தமிழ் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டது. என்பதையும் கூறி வைக்கிறோம்.

தற்போது திஸ்ஸ விகாரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். அதனால் அவர்களின் நலன் கருத்தி விகாரையில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள இருப்பதனால் , அப்பணிகளுக்கு பிரதேச சபையினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன் , ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையை பாதுகாத்து தர வேண்டும் எனவும் கோருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்