சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 04 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 06 மணிக்கு நிறைவுபெற்றுள்ளது.
மேலும், நாளை(01) காலை 06 மணிக்கு மீண்டும் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
இன்றைய போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.