தேவா இசையில் உருவான ‘அனந்தா’ படத்தின் இசை வெளியீடு

மனிதராக பிறந்து மகானாக வாழ்ந்து கொண்டிருக்கும் புட்டபர்த்தி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களை மையப்படுத்தி சமூக பக்தி திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘அனந்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனந்தா’ எனும் திரைப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், வை. ஜி. மகேந்திரன், ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், அபிராமி வெங்கடாசலம், ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. எல். சஞ்சய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைத்திருக்கிறார். சாய்பாபாவின் இறைநிலை புகழை உரக்க உச்சரிக்கும் இந்த திரைப்படத்தை இன்னர் வியூ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கிறார்.

விரைவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் லிங்குசாமி, பாடகர் மனோ, நடிகர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ” 150 நாடுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்கள் சாய் பாபாவை வணங்குகிறார்கள். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இந்தத் தருணம் வரை என் வாழ்வில் எனக்கு கிடைத்த அதிசயமாக தான் பார்க்கிறேன். ஒவ்வொரு விடயங்களையும் பாபா தான் நிகழ்த்துகிறார். அவருடைய பக்தர்களுக்கு இந்தப் படம் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தும். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு இந்தப் படம் சிறந்த பதிலாகவும் இருக்கும். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை

Sajith

மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச

November 17, 2025

மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன.

Sahara kari

​​”பிரஜாசக்தி” திட்டத்தின் தலைவர் பதவியில் JVP உறுப்பினர் நியமனம்: SLPP எதிர்ப்பு

November 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்கள், கட்சியின் தலைமை

aq

​அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி

November 17, 2025

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை