தேர்தல் முடிவை ஏற்க மறுத்து மோதல்: தான்சானியாவில் 700 பேர் பலி?

தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நேற்று முன்தினம்( அக்.29) அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபரான சிசிஎம் கட்சியைச்சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது. இதனால், அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. டார் எஸ் சலாம், மவான்சா, டொடோமா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்தனர். அவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுடன், இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிருபர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு நடக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தர் எஸ் சலாம் பகுதியில் 350 மற்றும் மவான்சா பகுதியில் 200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை