தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள்; மலையக அரசியல் அரங்கத்துடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடல்

தேர்தல் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் பவ்ரல் அமைப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்தாய்வு கூட்டங்களின் ஓர் அங்கமாக மலையக அரசியல் அரங்கத்துடனான கலந்துரையாடல் ஹட்டனில் நடைபெற்றது.

நீதியும் நியாமுமான தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான மக்கள் இயக்கமான பவ்ரல் நிறுவனப் பிரதிநிகளுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான மேற்படி கலந்துரையாடலில் வாக்காளர்களைப் பதிவு செய்தல், வாக்காளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல், முன்கூட்டிய வாக்களிப்பு முறையை அறிமுகம் செய்தல், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்தல், அரச ஆதனங்களைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்தல், தேர்தல் கொள்கைப் பிரகடனங்கள், வேட்புமனு நிராகரிப்பைக் குறைத்தல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் விஸ்தரிப்பு , தேர்தல் கால அட்டவணையை உறுதி செய்தல், தகைமை அடிப்படையில் தேசியப் பட்டியல் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல், வேட்பாளர் சுயவிபரக் கோவையைச் சமர்ப்பித்தல், கட்சி வாழுதல் குறித்த விதிமுறைகள் அமைத்தல், விசேட தேவையுடையோரின் வாக்குரிமையை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், தேர்தல் பிரசாரச் சட்டங்கள், பிரஜைகளை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல், தேர்தல்கள் நீதிமன்ற முறையை ஸ்தாபித்தல், தேர்தல் முறைமைகளும் ஆட்சி முறைமையும் ஆகிய 21 தலைப்புகளின் கீழ் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மலையக மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான பல முன்மொழிவுகளை எடுத்துரைத்துள்ளதோடு அவற்றை எழுத்து மூலமாகவும் தேசிய மறுசீரமைப்பு மட்டத்துக்கு வழங்கவுள்ளதாகவும் மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

“மலையக மக்களின் குடியுரிமைப் பறிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று தசாப்த காலமாக அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே மலையக மக்கள் இந்த நாட்டில் வாழவைக்கப்பட்டனர்.

இதன் பின்னாளில் இலங்கைக் குடியுரிமை கிடைக்கப்பெற்ற போதும் கூட அவை அர்த்தமுள்ள குடியுரிமையாக அமையவில்லை.

இந்த மூன்று தசாப்த கால அரசியல் இடைவெளியைச் சரி செய்யும் வகையில் நாடாளுமன்றம், மாகாண சபை முறைமைகளில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்துக்கான தேர்தல் தொகுதி மற்றும் பிரதிநிதித்துவச் சிறப்பு ஏற்பாடு உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகைய கலந்துரையாடல்களை மலையக மாவட்டங்கள் தோறும் அரசியல் அரங்கம் முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் தமது அடுத்த கலந்துரையாடலை பதுளை மாவட்டத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் மயில்வாகனம் திலகராஜா மேலும் கூறினார்.

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி

s

ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

March 2, 2026

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

china ir

ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

March 2, 2026

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும்

Nirmalan

தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி – தனபாலசிங்கம் நிர்மலன்

March 2, 2026

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய

sa

எதிர்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

March 2, 2026

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள

val

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை வாளினால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்!

March 2, 2026

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின்

d

அவசரகால நிலை நீடிப்பு

March 2, 2026

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி

hga

எரிவாயு விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தது!

March 2, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக

ar

திருமலையில் மாணவர்களின் வெளிப்புற ஓவியப் பயிற்சி

March 2, 2026

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை

sc

பஞ்சாபில் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

March 2, 2026

பஞ்சாபில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு

san

மௌனம் காக்கும் விஜய்; மாதர் சங்கம் கடும் கண்டனம்!

March 2, 2026

டிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு

s

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

March 2, 2026

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான