கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, தேயிலைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேதமடைந்த இயந்திரங்களை பழுதுபார்க்க வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருப்பதாலும், வீதிகளில் ஏற்பட்ட சேதம் தேயிலை ஏற்றுமதியை பாதிக்கக்கூடும் என்பதாலும், இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரி லுசாந்த டி சில்வா கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையை மிரள வைக்கும் அநுரவின் நண்பன்.. வெகு விரைவில் அதிரடி மாற்றம்!
இலங்கையை மிரள வைக்கும் அநுரவின் நண்பன்.. வெகு விரைவில் அதிரடி மாற்றம்!
இலங்கையில் தேயிலை ஏற்றுமதி செய்யும் 30 நிறுவனங்கள் உள்ளன. இதன் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 110 பில்லியன் மதிப்புடைய தேயிலையை ஏற்றுமதி செய்கின்றன. இந்தநிலையில் அந்த நிறுவனங்கள், மீண்டும் செயற்பட இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம்.
இதன் காரணமாக, தேயிலைத் தொழில் இழப்புகளைச் சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேதமடைந்த இயந்திரங்களை மீட்டெடுக்க இலங்கையில் தொழில்நுட்பங்கள் இல்லை எனவே அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் லுசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.