கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் மின்னுயர்த்தி (Lift) ஒன்று செயலிழந்து , 15 நோயாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் (OPD) அமைந்துள்ள மின்னுயர்த்தி ஊடாக மேல் மாடிக்கு செல்வதற்காக 15 பேர் அதற்குள் ஏறியுள்ளனர். இதன் போது, திடீரென அதன் கதவுகள் மூடப்பட்டு மின்னுயர்த்தி செயலிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர், மின்னுயர்த்தியின் கதவுகளை உடைத்து அதற்குள் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.