நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.
புதிய விற்பனை நிலையங்கள் மாரவில, மெல்சிறிபுர, ஹொரக்கெல, ருகட்டான மற்றும் மரதவில ஆகிய பண்ணைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விற்பனை நிலையங்கள் மூலம், உயர்தர கால்நடை உற்பத்தி பொருட்கள் பொதுமக்கள் செலுத்தக்கூடிய விலையில் வழங்கப்படும் என்று தேசிய கால்நடை அபிவிருத்தி சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவீன பதப்படுத்தல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்தத் தயாரிப்புகள், மக்களின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்துவதையும், புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலகுவாகப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.