“தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிப்பு

நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft) இன்றைய தினம் (14) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெகுஜன ஊடகப் பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரிடம் வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

வெகுஜன ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுயாதீன பல்தரப்புப் பங்குதாரர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கையானது, 2023 மே மாதம் முதல் 2025 டிசம்பர் வரையான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான பல்வகைப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையில் பல துறைகளுக்கு கொள்கை ரீதியான தேவை இருப்பதை மக்கள் போராட்டமானது (அரகலய) சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அதற்கான கொள்கைகளை உருவாக்கும் பணிகள் தற்போது அமைச்சு மட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்த ஊடகக் கொள்கையானது வெறுமனே அமைச்சின் கொள்கை மட்டுமல்ல எனவும், அமைச்சு இந்த பணிக்கான வசதிகளை மட்டுமே செய்து கொடுத்தது எனவும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இவ்வாறானதொரு கொள்கையை சுயாதீன பல்தரப்புப் பங்குதாரர் குழுவொன்று தயாரிப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மை மற்றும் குடிமக்களின் தாக்கம் குறித்தும் வெகுஜன ஊடக அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதன் ஆரம்ப வரைவானது, (Zero Draft) 2023 ஆம் ஆண்டில் வெகுஜன ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட 23 உறுப்பினர்களைக் கொண்ட ஆரம்ப வரைவுக் குழுவின் மூலம் 2024 ஜூலை மாதத்தில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் நியமிக்கப்பட்ட 28 உறுப்பினர்களைக் கொண்ட பல்தரப்புப் பங்குதாரர் குழுவினால் இந்த மேம்படுத்தப்பட் வரைபைத் தயாரிக்கும் செயல்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக, 2025 ஜூன் மாதம் முதல் அமைச்சின் இணையதளத்தில் ஆரம்ப வரைவை மும்மொழிகளிலும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வெகுஜன ஊடக அமைச்சு, தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM) மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் (MMM) போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கொழும்பு, கண்டி, புத்தளம், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்களின் கருத்துகளைப் பெற்று இந்த பணிக்கான மக்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஹர்ஸ பண்டார, வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி – வெகுஜன ஊடகம்) Ms. நெலும் தில்ஸாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் தேசிய ஊடகக் கொள்கையை வரைந்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ont

நவீனப்படுத்தப்படுகின்றது ஒன்டாரியோ மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

March 14, 2026

ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு

55

கனடா – அல்பர்டா ஆசிரியர்கள் “பணிக்கு திரும்பச் செல்லும்” சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த கோரிக்கை நிராகரிப்பு

March 14, 2026

டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை

ano

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மத்திய கிழக்குச் சூழ்நிலை மாறியுள்ளது!

March 14, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை

mett

தொழில்நுட்ப மாற்றங்களால் மெட்டாவில் 20 வீத ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு?

March 14, 2026

சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20

nor

வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!

March 14, 2026

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய

med

“தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிப்பு

March 14, 2026

நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft)

f

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சுற்று நிரூபத்தில் விரைவில் மாற்றம்

March 14, 2026

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது குறித்த சுற்று

vimal

நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார் – விமல் வீரவன்ச கிண்டல்

March 14, 2026

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. நாட்டில் பல தீவிர பிரச்சினைகள்

arres

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

March 14, 2026

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) காலை

no

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு; விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

March 14, 2026

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

ic

லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி

March 14, 2026

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்

ddd

பேராதனை பால நிர்மாணப் பணிகள்

March 14, 2026

பேராதனை ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என புகையிரத நிலைய