தெளிந்த பார்வை, பிரகாசமான எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற முக்கியமான பொது கண் சுகாதார முயற்சியாகிய, நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் திட்டத்தை பதிவுசெய்கிறது.
இந்த விரிவான கண் பரிசோதனை திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு ஆலோசகர் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் அவர்களின் தலைமையில் வட மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் ஆகியோர் பங்கேற்றனர்.