சிலியின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
தென் அமெரிக்க நாடான சிலியில், 38வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் துவங்கியது. இந்த தேர்தல் முதல் முறையாக கட்டாய ஓட்டுரிமை என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில், ஒரு கோடியே 58 லட்சம் பேர் ஓட்டளித்தனர்.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் மற்றும் மத்திய- இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், ஆளும் கூட்டணியின் வேட்பாளருமான ஜென்னெட் ஜாரா இடையே போட்டி நிலவியது.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற தேர்தலில், ஜோஸ் அன்டோனியோ காஸ்ட், 58.3 சதவீத ஓட்டுகளைப் பெற்று வென்றார். இதன் மூலம், 1990ம் ஆண்டுக்குப் பின், சிலியில் மீண்டும் வலதுசாரி அரசு அமைய உள்ளது.