யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தவறான முடிவெடுத்த நிலையில் யுவதி ஒருவரின் சடலம் நேற்று (31.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.