துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய கோலி

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

றோஹித் ஷர்மா, 2. விராட் கோலி, 3. டரைல் மிற்செல், 4. இப்ராஹிம் ஸட்ரான், 5. ஷுப்மன் கில், 6. பாபர் அஸாம், 7. ஹரி டெக்டர், 8. ஷாய் ஹோப், 9. சரித் அசலங்க, 10. ஷ்ரேயாஸ் ஐயர்.
மேற்கூறப்பட்ட போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் குல்தீப் யாதவ், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

ரஷீட் கான், 2. ஜொஃப்ரா ஆர்ச்சர், 3. குல்தீப் யாதவ், 4. மகேஷ் தீக்‌ஷன, 5. கேஷவ் மஹராஜ், 6. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ், 7. மிற்செல் சான்ட்னெர், 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. அப்ரார் அஹ்மட், 10. மற் ஹென்றி
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

அஸ்மதுல்லா ஓமர்ஸாய், 2. சிகண்டர் ராசா, 3. மொஹமட் நபி, 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. ரஷீட் கான்.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 61 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் போட்டியில் 84 ஓட்டங்களைப் பெற்ற ஸ்டீவன் ஸ்மித், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

ஜோ றூட், 2. கேன் வில்லியம்சன், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ஹரி ப்றூக், 5. கமிந்து மென்டிஸ், 6. தெம்பா பவுமா, 7. ட்ரெவிஸ் ஹெட், 8. யஷஸ்வி ஜைஸ்வால், 9. டரைல் மிற்செல், 10. செளட் ஷகீல்.
இந்நிலையில் மேற்படி ஆஷஸ் போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிற்செல் ஸ்டார்க், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

ஜஸ்பிரிட் பும்ரா, 2. மற் ஹென்றி, 3. மிற்செல் ஸ்டார்க், 4. நொமன் அலி, 5. மார்கோ ஜன்சன், 6. பற் கமின்ஸ், 7. ககிஸோ றபாடா, 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. ஸ்கொட் போலண்ட், 10. நேதன் லையன்.
இதேவேளை இந்த ஆஷஸ் போட்டியில் 77 ஓட்டங்களையும் பெற்றிருந்த ஸ்டார்க், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

இரவீந்திர ஜடேஜா, 2. மார்கோ ஜன்சன், 3. பென் ஸ்டோக்ஸ், 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. மிற்செல் ஸ்டார்க்.
இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 59 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய இந்தியாவின் ஹர்திக் பாண்டியா இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களின் பட்டியலில் ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

சைம் அயூப், 2. சிகண்டர் ராசா, 3. றொஸ்டன் சேஸ், 4. ஹர்திக் பாண்டியா, 5. மொஹமட் நவாஸ்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

அபிஷேக் ஷர்மா, 2. பில் ஸோல்ட், 3. பதும் நிஸங்க, 4. ஜொஸ் பட்லர், 5. சஹிப்ஸடா பர்ஹான், 6. திலக் வர்மா, 7. ட்ரெவிஸ் ஹெட், 8. டெவால்ட் பிறெவிஸ், 9. மிற்செல் மாஷ், சூரியகுமார் யாதவ்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

வருண் சக்கரவர்த்தி, 2. ஜேக்கப் டஃபி, 3. ரஷீட் கான், 4. அப்ரார் அஹ்மட், 5. வனிது ஹசரங்க, 6. அடில் ரஷீட், 7. அகீல் ஹொஸைன், 8. முஸ்தபிசூர் ரஹ்மான், 9. நாதன் எலிஸ், 10. அடம் ஸாம்பா.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்