இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக விசேட பாதுகாப்பு குழுவொன்றை (Special Security Team) பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் முத்தரப்பு தொடரை இலக்காகக் கொண்டு, இலங்கை அணி வீரர்கள் தற்போது ஹம்பாந்தோட்டையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தப் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது 3 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரிலும் விளையாட உள்ளது.