திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றும்(07) 52 ஆவது நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் குறித்த விவசாயிகள் தங்களுக்கான சாதகமான தீர்வு எட்டும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டதையடுத்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நீதி வேண்டி போராட்டங்கள் நடாத்திய போதும் அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் எங்களை கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.