தீர்வுகள் வழங்கப்படாமையால்; தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தோம் – வைத்தியர் பிரபாத் சுகததாச

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.

வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இன்று நவம்பர் 17 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொழில் முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. வைத்தியர்களை இந்நாட்டில் உள்ள விசேட ஊழியர் குழுவினராக அடையாளம் கண்டு அவர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவது அவசியம். ஆகையால் வைத்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள டெட் கொடுப்பனவு, மேலதிக சேவைகால கொடுப்பனவு மற்றும் விடுமுறை கால கொடுப்பனவு தொடர்பிலும் அரசாங்கம் கவனத்தில் கொள்வது அவசியம்.

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட இன்று திங்கட்கிழமை (17) காலை 9.30 மணியளவில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்த கலந்துரையாடல் இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் போல அமையக் கூடாது என்பதில் நாம் தீர்மானமாக உள்ளோம். தீர்க்கமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் வாக்குறுதிகளை இனி ஒருபோதும் ஏற்கப்போவதில்லை.

அரசாங்கத்தினர் எமக்கான தீர்வுகளை பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இல்லை எனில் வைத்தியர்களால் இன்று திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளதுடன், அதை தீவிரப்படுத்தவும் தயாராக உள்ளோம் என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த