தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன், தன்னை தி.மு.க.-வில் இணையச் சொல்லி ரூ. 50 கோடி மற்றும் அமைச்சர் பதவி பேரம் பேசியதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. அமைச்சரின் உதவியாளர்கள் பெயரில் தன்னிடம் பேரம் பேசியதாகவும், அதற்கு இணங்காவிட்டால் மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தவெக எம்.எல்.ஏ.-க்கள் விலகல் விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இந்த புதிய புகார் தி.மு.க.-விற்கும் தவெக-விற்கும் இடையிலான அரசியல் பகையை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ. இளையராஜா புகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடியோ விவகாரம் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#VijiSaravanan #Tvk #DMK #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #BriberyCase #Politics2026 #AudioProof #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash