தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சுற்று நிரூபத்தில் விரைவில் மாற்றம்

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது குறித்த சுற்று நிரூபத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே 5 மாவட்டங்களுக்கு இது தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுக்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மேலதிக செயலாளர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அத்தோடு குருணாகல், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.

அநுராதபுரத்தில் 213 வீடுகள் முழுமையாகவும், 3008 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. முழுமையாக சேதமடைந்தவற்றில் 14 வீடுகளின் உரிமையாளர்களைத் தவிர, ஏனையோருக்கான கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு நிர்மாணப்பணிகளையும் ஆரம்பித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதிலேயே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு எவ்வித சேத மதிப்பீடுகளும் இன்றி இரு கட்டங்களாக 5 இலட்சம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்று நிரூபத்தில் காணப்படும் சில சொற்களிலுள்ள குழப்பங்களே இந்த கொடுப்பனவுகளை வழங்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே அவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தும் சொற்களில் மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக வீடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய குழுக்களை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள் தேவையா? , தேவையெனில் அவை யாருக்கு தேவை? , எண்ணிக்கை மற்றும் இடம் என்பவை குறித்து இந்த குழு தீர்மானிக்கும். இது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களுக்கமைய அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும்.

குறிப்பாக மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்களை முற்றாக வெளியேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வீடுகளை அமைப்பதற்கு அனுமதியளிக்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தமது காணியுடன் இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு அரச காணிகள் வழங்கப்படும். அவ்வாறில்லை எனில் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சமூகக் குடியிருப்புக்களை அமைத்து அவற்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

f

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சுற்று நிரூபத்தில் விரைவில் மாற்றம்

March 14, 2026

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது குறித்த சுற்று

vim

நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார் – விமல் வீரவன்ச கிண்டல்

March 14, 2026

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. நாட்டில் பல தீவிர பிரச்சினைகள்

arres

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

March 14, 2026

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) காலை

no

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு; விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

March 14, 2026

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

ic

லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி

March 14, 2026

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்

ddd

பேராதனை பால நிர்மாணப் பணிகள்

March 14, 2026

பேராதனை ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என புகையிரத நிலைய

ca

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான்

March 14, 2026

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

goe

இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி முக்கிய அறிவிப்பு

March 14, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த

ir

கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

March 14, 2026

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப்

je

ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மீண்டும் பேச்சு

March 14, 2026

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் தொலைபேசியில் பேசியுள்ளேன் எனவும் இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட்டது

uni

கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

March 14, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள்

4556

அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

March 14, 2026

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” –