மன்னார் – தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 189,000 சிகரெட்டுகள், 33 லீற்றர் 600 மில்லிலீற்றர் பூச்சிக்கொல்லிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் புத்தளம் – பாலாவி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.