தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள தொல்பொருள் பதாகை அகற்றப்படாவிட்டால் சட்டநடவடிக்கை ?

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் இ. திரேசகுமாரன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சனிக்கிழமை (22) பிரதேசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தாந்தாமலை கிராமத்திலே அமைந்திருக்கின்ற எங்களுடைய பாரம்பரியமான பூர்வீகமாக எங்களுடைய இந்துமதத்தை பேணி பாதுகாக்கின்ற வழிபாட்டுத்தலமாக இயங்குகின்ற எங்களுடைய முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக வந்து தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் இடம் என்ற பெயர்ப்பலகையை மாட்டிவிட்டு சென்றிருக்கின்றார்கள்.

உண்மையாகவே அவர்கள் ஒரு திணைக்களமாக நாங்கள் பார்க்கவில்லை ஏன் என்று சொன்னால் ஒரு திணைக்களத்துக்கு தெரிய வேண்டும் இந்த பிரதேசத்திலே பிரதேச சபையின் ஊடாக பிரதேச சபையின் அனுமதி எடுத்த பின்பு தான் ஒரு பெயர் பலகை மாற்றலாம்.

ஆகவே அதை நாங்கள் ஒரு திணைக்களமாக பார்க்கவில்லை அவர்கள் ஒரு பௌத்த மதத்தினுடைய கொள்கைகளை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகத்தான் நாங்கள் அதை பார்க்கின்றோம்.

இது ஒரு மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் இது சிங்கள பௌத்த மக்களை பாதுகாக்கின்ற ஒரு திணைக்களத்தோடு மட்டுமல்ல அவர்களுடைய அந்த மதத்தை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகவும் நாங்கள் இதை பார்க்கின்றோம்.

உடனடியாக அவர்கள் அந்த பெயர் பலகையை அகற்ற வேண்டும் அவ்வாறு அகற்றாத பட்சத்தில் இன்று நாங்கள் அதனை சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றோம் இடங்கள் ஆகவே உடனடியாக அவை மாற்றப்பட வேண்டும்.

அகற்றாத பட்சத்தில் எமது மக்கள் இணைந்து மக்கள் போராட்டம் வெடிக்கும். அவர்களுக்கு தெரிய வேண்டும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி அவர்களுடைய இந்த செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

இதனை நாங்கள் எந்த ஒரு வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். ஆகவே எங்களுடைய மக்கள் எங்களுடைய பிரதேசம் நமது பிரதேசத்தில் இருக்கின்ற இந்து ஆலயங்களை நாங்கள் மையப்படுத்தி அதாவது 99 வீதம் இந்து மதம் மக்கள் வாழுகின்ற ஒரு இடமாக இந்த பிரதேசம் காணப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான ஒரு நயவஞ்சக அவர்கள் செய்யக்கூடாது நான் இன்று உடனடியாக உரிய திணைக்களத்திக்கு எழுத்து மூலமாக ஒரு கடிதம் ஒன்றினை அனுப்பி இருக்கின்றேன்.

ஆகவே இவர்கள் உடனடியாக வந்து அந்த பெயர் பலகையை அகற்றாத பட்சத்தில் நான் திங்கட்கிழமைக்கு பிற்பாடு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எதிர்பார்த்து இருக்கின்றோம்.

இது அவர்களுக்கு சொல்லுகின்ற ஒரு திணைக்களம் என்கின்ற முறையில் இதனை நாங்கள் கூறி வைக்க விரும்புகின்றோம். இல்லாத பட்சத்தில் இன்றே நாங்கள் அதனை அகற்றி இருப்போம்.

ஆகவே திணைக்களம் என்ற படியினால் அரசு நிறுவனம் நாங்களும் ஒரு அரச திணைக்களம் ஆகவே அவர்கள் இதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இல்லாத பட்சத்தில் நாங்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதனை நான் இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.