தவெகவில் உட்கட்சி மோதல்?

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அக்கட்சியில் உள்நிலை மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தவெகவில் இருந்து மிக முக்கிய புள்ளி விலக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மீதும் அதிக கவனம் திரும்பியுள்ளது. புதிய கட்சியாக இருந்தாலும், தவெக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

விஜய் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகிறார். இதன் மூலம், நேரடியாக மக்களின் மனநிலையை அறிந்து, தேர்தல் வியூகங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தவெகவில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் விலகக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராக கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, கட்சிக்குள் தனது பங்கு மற்றும் முக்கியத்துவம் குறைந்து விட்டதாக உணர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சியின் தேர்தல் வியூகம், மாநாடு திட்டமிடல், பிராண்டிங் போன்ற பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்த பிறகு தன்னை புறக்கணிப்பதாக நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கட்சிக்குள் உள்நிலை அதிருப்தி மற்றும் கோஷ்டி மோதல்கள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

மேலும், ஆதவ் அர்ஜுனா ஊடகங்களில் தன்னிச்சையாக பேசுவது விஜய்க்கு ஏற்றதாக இருப்பதாக கருதப்படுவதால், ஜான் ஆரோக்கியசாமி மனவருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல என். ஆனந்த் விஜயின் வலதுகரமாக இருப்பதாலும் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் ஜான் ஆரோக்கியசாமி என்றும் செய்திகள் கசிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அவரது முழு டீமும் தேர்தல் வியூக பணிகளில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், ஜான் ஆரோக்கியசாமி தவெகவில் தொடர்வாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் தனது முடிவை விஜய்க்கு தெரிவிக்கக்கூடும் என்றும், அதற்கு விஜய் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன வருகிறது. இந்த விவகாரம், தவெகவின் எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு