ரஜினி சுந்தர் சியுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யாராக இருப்பார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த் -சுந்தர் சி கூட்டணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு இத்தகவல் வெளியாகும்போது அனைவரும் இது வெறும் வதந்தியாக தான் இருக்கும் என நினைத்தார்கள். ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் இயக்கத்திலேயே நடித்து வருவதால் அவர் சுந்தர் சி போன்ற ஒரு மூத்த முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் உண்மை இல்லை என பெரும்பாலானோர் சொன்னார்கள்.
ஆனால் தற்போது ரஜினி சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான செய்தியாக அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க சுந்தர் சி அப்படத்தை இயக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது.