தலிபான்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

‘சமரசம் செய்யுங்கள் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கு, இரு நாட்டு எல்லையில் இருந்து இயங்கி வரும் டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத குழுவே காரணம்.

வான்வழி தாக்குதல் ஆப்கனின் சர்வதேச எல்லைக்கோடாக குறிக்கப்படும் டூரண்டோ எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் செயல்பட்டு வரும் இக்குழு, பழமைவாத இஸ்லாமிய ஆட்சியை பாகிஸ்தானில் நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

டி.டி.பி., குழு ஆப்கனில் இருந்து கொண்டு பாகிஸ்தானில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்துமாறு பலமுறை ஆப்கன் தலிபான் அரசை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. இருந்தும் அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஆப்கானிஸ்தானால் கட்டுப்படுத்த இயலவில்லை.

சமீபத்தில், பாகிஸ்தான் எல்லை தாண்டி சென்று ஆப்கனில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

மூன்று சுற்று பேச்சு நடந்த நிலையில், இருதரப்பும் அதில் முன்னேற்றம் காண தவறிவிட்டன. இதையடுத்து, முந்தைய பேச்சின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம், இஸ்தான்புல் பேச்சின் போது ஏற்பட்ட தோல்வியால் கைவிடப்பட்டது.

ஆப்கனுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்திய போது, ‘டி.டி.பி.,க்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், டி.டி.பி., போராளிகளை ஒப்படைக்க வேண்டும், எல்லைக்கோட்டு பதற்றத்தை அதிகரிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஒரு தடுப்பு பகுதி யை உருவாக்க வேண்டும் மற்றும் வர்த்தகம், இருதரப்பு ஒத்துழைப்பை இயல்பாக்க வேண்டும்’ என்ற சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. ஆனால், இந்த நிபந்தனைகளில் குறிப்பாக டி.டி.பி., போராளிகளை ஒப்படைத்தல் மற்றும் தடுப்பு பகுதிகளை உருவாக்குதல் தொடர்பான திட்டங்களை ஆப்கன் எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், தங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத பாகிஸ்தான், ‘சமரசம் செய்யுங்கள் அல்லது ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளுங்கள்’ என, ஆப்கன் தலிபான் அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச் சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்திருந்தார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்திச் சென்றார்.

ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் நெருங்கி வருவது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆப்கனுடன் நீண்டகாலமாக கடைப்பிடித்து வந்த உறவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் தற்போது தலிபானின் நிலைபாட்டை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கிறது. புவிசார் அரசியல் அவமதிப்பாகவும் கருதுகிறது.

இதன் விளைவாக ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள தலிபான் எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்களுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்த துவங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் உளவு அமைப்பு, முக்கியமான ஆப்கன் ஜனநாயக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளது.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்