தலதா அத்துகோரள அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசு அரச நிறுவனங்களுக்குத் தமக்குச் சாதகமானவர்களைத் தலைவர்களாக நியமித்து, அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது.

தேவையற்ற விதத்தில் அனைவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயகக் கட்டமைப்புக்கு உட்பட்டு அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையாலேயே, 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்களால் அதிகாரத்துக்கு வர முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலப்பகுதியில் இந்த அரசின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எதனையும் காண முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தலைப்பைக் கொண்டு வந்து, நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே அரசு திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போதிலும், ஒரு வருடமாகியும் சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை நியமிக்க இந்த அரசால் முடியவில்லை.

நீதிமன்றமும், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் தற்போது பல முக்கிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

தற்போதைய அமைச்சரவையில் அங்கத்தவராக இருக்கும் குமார ஜயகொடிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கிடைக்கப்போகும் தீர்ப்பை நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நீதித்துறையின் மீதான கௌரவத்துடனும், அதன் சுதந்திரம் பேணப்படும் என்ற நம்பிக்கையுடனும் இந்த வழக்கு நடவடிக்கைகள் சரியாக முன்னெடுக்கப்பட்டுச் சரியான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கை வரலாற்றில் அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் நாட்டுக்காகப் பணியாற்றியுள்ளன.

நாட்டில் ஜனநாயகம் நலிவடைந்து செல்லும் இந்த வேளையில், ஜனநாயகத்தைப் பாதுகாத்துச் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

4556

அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

March 14, 2026

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” –

fue

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் புதிய செய்தி

March 14, 2026

உலகில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும்

45

கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள்

March 14, 2026

ஆண்டுதோறும் நடைபெறும் கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள் மற்றும் வணிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டமை பெருமையளிப்பதாக

xa

மொன்ரியல் நகர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; வன்கூவரில் ஒரு பெண்ணைக் குத்திக்கொன்றவர்?

March 14, 2026

வன்கூவரில் இரண்டு குழந்தைகளின் தாயை குத்திக்கொன்ற 35 வயதான மொன்ரியல் நபர், பிளாட்டோ மொன்ரோயல் பகுதியில் உள்ள ஒரு dépanneur

chaco

மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்?

March 14, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை

d

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதானவர்களின் விபரங்கள் வெளியீடு

March 14, 2026

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக

heat

வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

March 14, 2026

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு,

Sri

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால் தோல்வியால் உங்களை வெல்ல முடியாது – சிறீதரன்  எம்.பி

March 14, 2026

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக்

plas

கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பின் நால்வர் உயிரிழப்பு – சுகாதார அமைப்பு தகவல்

March 14, 2026

கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பிறகு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நால்வரில் மூவர் மணிடோபா மாகாணத்தில்

Parliament

17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

March 14, 2026

மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி

c

அமெரிக்காவின் முடிவால் சீனா கடும் அதிருப்தி

March 14, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்த பிறகு, தாய்வானுக்குப் புதிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலை

Thala

தலதா அத்துகோரள அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

March 14, 2026

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்