தமிழ் மக்களுக்கு விரோதமான கிவுள்ஓயா திட்ட போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்குமா?

கிவுள்ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு அமைவாக நேற்றைய தினம் பொது அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது.

எனினும் குறித்த சந்திப்பில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சிறிடெலோ கட்சியின் சார்பில் ஒருவரும் கலந்து கொண்டதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த கூட்டம் இடம்பெற்றபோது அனைத்து தமிழ் கட்சிகளும் இந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவார்களா? அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு தூதரகங்களுக்கு கடிதங்களை அனுப்புவார்களா? அதற்கு தயாராக உள்ளார்களா என்ற கேள்வியை பொது அமைப்புக்களின் சார்பில் ஒருவர் எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம்,

அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் இன்று இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்ததுடன், ஏற்கனவே தமிழ் கட்சிகள் கூடி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று இருந்தது எனினும் அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாத்திரமே கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும் அவர்களும் குறித்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பொது அமைப்புக்களுடனான குறித்த கூட்டத்திற்கு எந்தெந்த கட்சிகள் கலந்து கொண்டு என ஊடகவியலாளர் வன்னி பாராளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பிய போது, தாங்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் எனினும் தமிழரசு கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஸ்ரீ டெலோ சார்பில் ஒருவரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்