தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து கொக்குத்தொடுவாயில் யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கப்படுகிறது?

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைப்புக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பபைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் நாடாளுன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல்காணிகளையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின் குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகாவலி அதிகாரசபைதொடர்பில் குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இத்தகையசூழலில் 23.02.2026இன்று கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பு பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறிப்பாக கோட்டைக்கேணியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதயைும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கமக்கார அமைப்பினால் தமக்கு கோரிக்கை கடிதம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், இவ்விடயங்கள் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்