தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக போராடியவர்கள் உள்ளாட்சி நியமனத்தில் புறக்கணிப்பு?

உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் ஜான்சி ராணி வெளியிட்டு உள்ள அறிக்கை:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக, 3,631 மாற்றுத்திறனாளிகளை நியமித்து, முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி.
இது, மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்கிறது.

இருப்பினும், எங்களது பிரதான கோரிக்கையான, உதவித்தொகை உயர்வு குறித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.மேலும், நியமன உறுப்பினர்கள் தேர்வில் , பல்வேறு மாவட்டங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மற்றும் அவர்களின் குறைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில், அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது.

ஆனால், இந்த பணியிடங்களுக்கு பொருத்தமான, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக போராடியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மற்றும் பிரச்னைகளை அறியாத நபர்கள், ஆளும் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துவோரை, அரசு உறுப்பினராக தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது.

அதேபோல், மாவட்டங்களில் உறுப்பினர் நியமனத்திற்காக, கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, சில மாவட்டங்களில் கூட்டப்படாமல், உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட நபர்களில் தகுதியற்றவர்களை மாற்றும் வகையில், உள்ளாட்சி நியமன உறுப்பினர்களின் தேர்வை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7