தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்; ஆளுங்கட்சி தலையீடு?

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய தலைவராக, ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி உள்ளார்.

விருப்பம் தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர், துணை தலைவர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசவும், படம் தொடர்பான சிக்கல்கள், நடிகர்களின் சம்பளம் மற்றும் படத்தயாரிப்பு செலவு, வினியோகத்தில் உள்ள பிரச்னைகளை சுமுகமாக தீர்க்கவே, தயாரிப்பாளர் சங்கம், 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இதுவரை இச்சங்கம் சந்தித்த தேர்தல்களில், அரசியல் தலையீடுக்கு இடமே இல்லாமல் இருந்து வந்தது. அதை தொடரும் வகையில், தற்போதும் எல்லாரும் கூடி பேசி, போட்டியின்றி தலைவரை தேர்வு செய்ய, சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அப்படியே போட்டி ஏற்பட்டாலும், அதை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும், தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.

ஆனால், அதற்கு எதிராக, ஆளும் கட்சியை சேர்ந்த தயாரிப்பு நிறுவன முக்கிய நிர்வாகி செயல்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பலரை, தன் பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்திற்கு அழைத்து பேசி வருகிறார்.

அதன் வாயிலாக, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர் என்ற போர்வை யில், தனக்கான ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று, நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு இதற்காக, முதல்வர் குடும்பத்தினர் பெயரையும் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த விஷயம், ஆளும் கட்சி மேலிடத்திற்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.

படத் தயாரிப்பு நிறுவனத்தை கவனிக்கும் ஆளும் கட்சியின் இளம் வாரிசுக்கு பக்க பலமாக உள்ள அந்த நிர்வாகி, தயாரிப்பாளர் சங்கத்தையே தன் கையில் வைத்துக்கொள்ள திட்டமிட்டு, இப்படி சங்க விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக, தயாரிப் பாளர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த