தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாகரிகமற்ற கருத்துக்களால் தமிழ் மக்களை தலை குனிய வைக்கிறார்கள் – சந்திரசேகரன் எம்.பி

தமிழ் மக்களை தலை குனிய வைக்கும் விதத்திலேயே தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (21-01-2026)பிற்பகல் நடைபெற்றுள்ளது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தலைகுனியும் விதத்திலேயே நாகரீகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் இது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தலை குனிய வைக்கின்ற ஒரு கருத்துக்களாகவே காணப்படுகின்றன.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் அல்லது அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களையோ ஆதரவாளர்களையோ விமர்சிப்பதை தவிர அவர்கள் வேறு எதனையும் செய்யவில்லை இப்போது பரந்தன் இராசயன தொழிற்சாலையை உருவாக்குவதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறன.

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ளுகின்ற போது இங்குள்ள ஒரு சில அரசியல்வாதிகள் சென்று வழக்கு தாக்கல் செய்கின்றார்கள் எங்களுக்கு துறைமுகங்கள் வேண்டாம் அபிவிருத்திகள் வேண்டாம் விளையாட்டு மைதானங்கள் வேண்டாம் யாழ் குடாநாடு எப்படி நாசமாக போனாலும் பரவாயில்லை நான் கொழும்பில் சுதந்திரமாக வாழ்கின்றேன்.

அந்தத் தொணியிலே அவர்கள் செயற்படுகின்றார்கள் எதிர்காலத்தில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் வடமாகான ஆளுனர் மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் துறைசார் திணைக்கள பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

1956ம் ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை செயல்பட்ட தொழிற்சாலை, இப்போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் புனரமைப்பு பணிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் மறுமலர்ச்சி, பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதிலும், இலங்கையின் உள்நாட்டு இரசாயன உற்பத்தி திறனை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது.

காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் உற்பத்தி அலகுகளை மறுகட்டமைப்பதற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட், வளர்ந்து வரும் உள்ளூர் சந்தை தேவையை பூர்த்தி செய்ய பாலி அலுமினியம் குளோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி வசதிகளை நிறுவ திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்