தமிழ்கட்சிகளை ஒருமித்த நிலைக்கு கொண்டுவர மூன்றாவது சந்திப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பை எதிர்வரும் புதன்கிழமை (06) கொழும்பில் நடாத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திட்டமிட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதனையடுத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி சட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்துச் செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்’ எனக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போது புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமது கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானத்தை அறிவிப்பதற்குக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உடன்பட்டிருந்ததன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் புதன்கிழமை (6) கொழும்பில் நடாத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உத்தேசித்துள்ளது.

இதுகுறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, புதன்கிழமை நடாத்தப்படவிருக்கும் சந்திப்பில் பங்கேற்பதற்கான சாத்தியப்பாடு குறித்து சட்டத்தரணிகள் பேரவை தன்னிடம் வினவியதாக உறுதிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி கடந்த 18 ஆம் திகதி தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அனுப்பிவைத்த கடிதத்தின் ஊடாகக் கோரப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் இன்னமும் பேரவை தெளிவுபடுத்தவில்லை என அவர்களிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த அவர்கள், தமிழரசுக்கட்சியினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் ஊடாகக் கோரப்பட்டிருந்த விடயம் குறித்து வெகுவிரைவில் பதிலளிப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,