தமிழின அழிப்பிற்கான நீதிவேண்டி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய ஈருருளிப் பயணமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டமானது போருக்குப் பின் இன்றும் தொடரும் திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை அனைத்துலக குமுகாயத்திற்கு வெளிப்படுத்துவதும் அனைத்துலக நீதியினை வேண்டுவதுமாக அமைகின்றது.
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 32 ஆவது தடவையாக ஜெனிவா நோக்கிய இவ் அறவழிப்போராட்டமாக இது தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 63 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு, இன்றும் தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிராக, உணர்வெழுச்சியோடு அனைத்துலக சமூகத்திடம் எம் இனத்தின் வலிகளை எடுத்துரைத்து இனவழிப்புகளிற்கு நீதி வேண்டி, எம் தாயக மண்ணின் விடுதலைக் கனவோடு காடு மலை காற்று காலநிலை என எதிர்வரும் இடர்களை எதிர்கொண்டு கடந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளையும் போகும் வழியெல்லாம் மேற்கொண்டு இன்று எட்டாவது நாளை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.