தமிழரசுக் கட்சியில் சிவஞானம் சிறிதரன் எம்.பி தொடர்பான முடிவுகளில் தெளிவில்லை!

தமிழரசுக் கட்சியை கொழும்பு நலன்சார் அரசியலுக்குள் செல்லவிடாமல் பாதுகாப்பவர் சிறீதரனே என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில், “தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய விருப்ப வாக்குகளைப் பெற்றவருமான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞ்ஞானத்தினாலும், பதில் செயலாளர் சுமந்திரனினாலும், நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை இருவரும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளனர்.

இது கட்சி அரசியல் குழுவின் தீர்மானம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் குழு தீர்மானம் என்றால் ஒருவர் முன்மொழிந்து இன்னொருவர் வழிமொழிந்திருக்க வேண்டும்.

அவ்வாறு எதுவும் அரசியல் குழுவில் நடந்ததாகத் தகவல்கள் இல்லை. அவர் பதவி நீக்கப்படுவதாக பதில் செயலாளர் சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தபோது அரசியல் குழுவில் இருந்த அனைவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள் என்றே செய்திகள் வருகின்றன. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் அவ்வாறு பதவி எதுவும் நீக்கப்படவில்லை என்றே கூறியிருக்கின்றார்.

பதில் தலைவர் சிவஞானமும் அவ்வாறு பதவி நீக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்றும் மட்டக்களப்பில் கூறியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியில் தற்போதுள்ள கட்டமைப்புகளில் மத்திய குழு என்றாலும் சரி, அரசியல் குழு என்றாலும் சரி, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட கட்டமைப்புகள் அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்